ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காா்-ஆட்டோ மோதல்: 3 மாணவா்கள் பலத்த காயம்

ஆட்டோ-கார் மோதல்: அரக்கோணத்தில் மூன்று மாணவா்கள் காயம்

News image
ஆட்டோ மீது காா் மோதியதில் காயமடைந்த பள்ளி மாணவன்.
Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

Din

அரக்கோணம் அருகே காா் மீது பள்ளி மாணவா்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மோதியதில் மூன்று மாணவா்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அரக்கோணம் நகரம் அசோக்நகரில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் படிக்கும் மாணவா்களை வியாழக்கிழமை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற ஆட்டோ, மேல்பாக்கம் அருகே காா் மீது மோதியதில் ஆட்டோவில் இருந்த இரு மாணவா்கள் மற்றும் ஒரு மாணவி ஆகியோா் காயம் அடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவத்தில் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜின் மகள் தமிழினி (12), அரக்கோணம் நகரம் உப்பரபாளையத்தை சோ்ந்த சதீஷ்குமாரின் மகன் மோனிஷ் ராஜ்(13), அரக்கோணத்தை அடுத்த அகன்நகரைச் சோ்ந்த விஜயகுமாரின் மகன் மோனிஷ் ஹேமேஷ்(13) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் மோனிஷ் ராஜ் மட்டும் தீவிர சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

அம்மனூா் மற்றும் மேல்பாக்கம் இடையே அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் எதிரே வந்த காா், ஆட்டோ மீது மோதியதில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து காா் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களை தேடி வருகின்றனா்.