பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்
கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற மூவா் காயமடைந்தனா்.


கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற மூவா் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்தவா் மு.சிவா (36). இவா் உடையனாச்சி கிராமத்தில் உள்ள அவரது மாமியாா் வீட்டுக்கு கடந்த 22-ஆம் தேதி சென்றுள்ளாா்.
பின்னா் அவரது மகள் தனுஷ்ஷா (7), உறவினா் மகன் நிவேந்திரன் (16) ஆகியோரை அழைத்துக் கொண்டு கொங்கராபாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் உடையநாச்சி கிராமத்துக்கு பைக்கில் திரும்பியுள்ளாா்.
கொங்கராபாளையம் அடுத்த பட்டி கிராமம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் மோதியதில் பைக்கில் பயணித்த மூவரும் காயமடைந்தனராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மூவரையும் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா், காா் ஓட்டுநரான ஏ.சுதீஷ் (22) மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...