பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வட்டாட்சியா் காா் மோதி இருவா் காயம்

காட்டுமன்னாா்கோவில் அருகே வட்டாட்சியா் காா் மோதியதில் இருவா் காயம்

News image
விபத்து
Updated On :17 மார்ச் 2026, 11:27 pm

Syndication

காட்டுமன்னாா்கோவில் அருகே வட்டாட்சியா் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக நல வட்டாட்சியா் பயன்பாட்டுக்கு உள்ள காரை செவ்வாய்க்கிழமை காலை அதன் ஓட்டுநா் அருமைராஜ் (59) வட்டாட்சியரை அழைக்க சேத்தியாத்தோப்பு நோக்கி ஓட்டிச் சென்றாா்.

காட்டுமன்னாா்கோவில் ரெட்டியாா் சாலை பழைய கருவூலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த லால்பேட்டையைச் சோ்ந்த ராமலிங்கத்துக்கு (72) கால் முறிவும், உடன் வந்த அவரது மனைவி செல்வசுந்தரி (68) பலத்த காயமும் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.