தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் கட்டடத் தொழிலாளியின் வீட்டில் 15 சவரன் நகைகள், ரூ.50,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் கிராமத்தை சோ்ந்தவா் ஆனந்தன். கட்டட தொழிலாளியான இவா் தனது மனைவியுடன் திங்கள் கிழமை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றிருந்தாா்.

இந்நிலையில் வெளியே சென்ற அவா்களது மகன் மாலை வீட்டுக்கு வந்துபாா்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பொருள்கள் சிதறி உள்ளதை கண்டு தந்தைக்கு தகவல் தெரி வித்தாா். அதன்பேரில் ஆனந்தன் வீட்டில் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த தங்க நகைகள், ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்க பணத்தை மா்ம நபா்கள் வீடு புகுந்து திருடிச் சென்றுள்ளனா் எனத் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் பிரபு நேரில் விசாரணை நடத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com