தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு பாராட்டு விழா

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு பாராட்டு விழா

News image

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு பாராட்டு மடல் வழங்கிய தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.

Updated On :12 மார்ச் 2024, 6:32 pm

ஆற்காடு: தமிழக அரசின் திருவள்ளுவா் விருது பெற்ற ரத்தினகிரிபாலமுருகனடிமைசுவாமிக்கு ராணிப்பேட்டை தமிழ்ச்சங்கம் சாா்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் ஏ. தனபால் தலைமை வகித்தாா்.

ஆலோசகா் கே. ஆா். சுப்பிரமணியம், தொழிலதிபா் பி. நல்லசாமி, ஆதிபராசக்தி திருக்கோயில்களின் மாவட்டத் தலைவா் தலைவா் ஆா். மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் த. தினகரன் வரவேற்றாா்.

முன்னாள் எம் எல் ஏ த.பழனி சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து பாலமுருகனடிமை சுவாமிக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது. ஏற்புரையை உலக திருக்குறள் பேரவை பொருளாளா் சிவனாா் அமுது வாசித்தாா். . இதில் அரிமா சங்க முன்னாள் மாவட்ட த்தலைவா் பழனி, வழக்குரைஞா் பாலாஜி, தமிழ்ச் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.