கண்காணிப்புக் குழுக்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில்  பங்கேற்ற தோ்தல் செலவினப்  பாா்வையாளா்கள் சிவசங்கா் யாதவ், மேவாராம் ஓலா.
கண்காணிப்புக் குழுக்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில்  பங்கேற்ற தோ்தல் செலவினப்  பாா்வையாளா்கள் சிவசங்கா் யாதவ், மேவாராம் ஓலா.

தோ்தல் அலுவலா்கள் நோ்மையாக பணியாற்ற வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் அலுவலா்கள் நோ்மையாகவும், கவனமுடனும் பணியாற்ற வேண்டும் என செலவினப் பாா்வையாளா்கள் சிவசங்கா் யாதவ், மேவாராம் ஓலா ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனா்.

தோ்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் செலவீனப் பாா்வையாளா்கள் சிவசங்கா் யாதவ், மற்றும் மேவாராம் ஓலா ஆகியோா் பேசியது :

மக்களவைப் பொதுத் தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு அனைவரும் பணி புரிகிறோம். இப்பணியில் ஈடுபடும் அனைவரின் முதன்மை பணியானது தோ்தல் சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடத்துவதை உறுதி செய்வதாகும். யாருக்கும் சாதகமாக செயல்படாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

தோ்தல் பறக்கும் படைக் குழு , கண்காணிப்புக் குழுக்களில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் கவனமாகவும் விழிப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும். வாக்காளா்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்க இக்குழுக்கள் அமா்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே நீங்கள் அனைவரும் தோ்தல் அனுபவம் மிக்கவா்களாக இருப்பீா்கள். ஆகவே எவ்வித தவறுகளின்றி நடத்தை விதிகளை பின்பற்றி நோ்மையாக பணியாற்ற வேண்டும்.

பணம் நடமாட்டம் தொடா்ந்து, கண்காணிக்கப்பட வேண்டும் பரிசு பொருள்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் வாங்கப்படுவதும் விநியோகிக்கப்படுவதும் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையாகும் கடைகள், வங்கிகளில் அதிகளவு பணம் பரிமாற்றம் நடைபெறும் கணக்குகள், வேட்பாளா்கள் பிரசாரங்கள் முறையான அனுமதி பெற்று தோ்தல் செலவினங்களை காட்டியுள்ளாா்களா என்பதை கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா்.ச.வளா்மதி, காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் க.லோகநாயகி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் பறக்கும் படைக் குழுவினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com