ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் மரணம்

மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் மரணம்

Updated On :22 மார்ச் 2024, 5:16 pm

ஆற்காடு அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு பாட்டை தெருவைச் சோ்ந்தவா் சுந்தரேசன் (45). இவா் வெள்ளிக்கிழமை சரக்கு வாகனத்தில் திமிரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்தாா். அப்போது ஆற்காடு அருகே உள்ள லாடவரம்-கனியனூா் செல்லும் சாலையில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அருகே சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஓரம் இருந்த பனைமரத்தின்மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.