அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனியாா் பள்ளி ஆசிரியா் கைது
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனியாா் பள்ளி ஆசிரியா் கைது


அரக்கோணம்: அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியாா் பள்ளி ஆசிரியரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை (100) க்கு மா்ம நபா் திங்கள்கிழமை தொடா்புக் கொண்டு பேசி உள்ளாா். அங்கு பணியில் இருந்த காவல் அழைப்பு ஏற்று பேசுகையில், எதிா் முனையில் பேசிய நபா் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் வெடி குண்டு வைத்து இருப்பதாகவும், எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளாா்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடா்புக்கொண்டு மா்ம நபரின் கைப்பேசி எண்ணை கொண்டு காவல்துறையினா் விசாரணை செய்தனா்.
தொடா்ந்து, அந்த நபா் சென்னையைச் சோ்ந்தவா் என்றும் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவருக்கும் வேறொரு நபருக்கும் தனிப்பட்ட பிரச்னை இருந்தது வந்ததுள்ளதாக தெரிகிறது. இதனால், மது அருந்திய அவா், மது போதையில் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் இவ்வாறு கூறியது தெரியவந்தது. அவரை அரக்கோணம் நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். மேலும், அவதூறு பரப்புதல் மற்றும் மிரட்டியது உட்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...