மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரியலூா் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தீவிர சோதனையின் நிறைவில், அது புரளி என்பது தெரியவந்தது.

News image
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா்.
Updated On :18 மார்ச் 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தீவிர சோதனையின் நிறைவில், அது புரளி என்பது தெரியவந்தது.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக இணையதள முகவரிக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு காவல் துறையினா் ’மோனா என்ற மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதும், மிரட்டல் புரளி என்பதும் தெரியவந்தது. மேலும், இந்தச் சோதனை காரணமாக பணிகள் பாதிப்பு இல்லை. மேலும், மின்னஞ்சல் யாரிடம், எங்கிருந்து வந்தது என்பது குறித்து இணைய குற்றப்பிரிவு காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கனவே, இரு மாதத்துக்கு முன்பும் ஆட்சியரகத்துக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.