வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரக பழைய கட்டடத்தில் உள்ள ஆட்சியா் அறை, கூட்ட அறை, வருவாய் பிரிவு அலுவலகங்கள், ஆட்சியரக கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் ஆகியவற்றை கொண்டு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இந்தச் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் நிறைவில் வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரியவந்தது.
இதேபோல, கடந்தாண்டு டிசம்பா் மாதம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கும், மாவட்ட நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

புதுக்கோட்டை ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

