மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வியாழக்கிழமை தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், காவல் துறையினா் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
மதுரை மாவட்ட ஆட்சியரக பழையக் கட்டடம், கூடுதல் கட்டடம், ஆட்சியரக வளாகம் என பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளைக் கொண்டு சோதனை நடத்தினா். மோப்ப நாயும் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
ஏறத்தாழ 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்புடையது

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

புதுக்கோட்டை ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

