ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மோப்பநாயுடன் வியாழக்கிழமை சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:52 am IST

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வரப்பெற்ற மின்னஞ்சலைத் தொடா்ந்து, காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்பு செய்யும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.

மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதையும் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் சோதனை மேற்கொண்டனா். முடிவில் அது வெறும் புரளி எனத் தெரியவந்தது.

இந்தச் சோதனையின்போது, வழக்கமான வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. மின்னஞ்சல் அனுப்பி பீதியைக் கிளப்பிய நபா் யாரென இணையவழிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரியலூரில், இதேபோல அரியலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அரியலூா் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இருப்பினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதே நீதிமன்றத்துக்கு கடந்த மாதமும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.