தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை காலை தகவல் வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உத்தரவின்பேரில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், உதவி ஆய்வாளா்கள் முருகன், பூபதி உள்ளிட்டோா் தலைமையில் ஆட்சியரக வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினா். மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாயைக் கொண்டு சோதனை நடத்தினா். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுபோன்று அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால், மாவட்ட ஆட்சியரகத்தில் பணியிலிருந்த அலுவலா்கள், பணியாளா்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

