

அரக்கோணம்: சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகல் சுமாா் 12 மணியளவில் திடீரென மேக மூட்டங்கள் திரண்டு இடி மின்னலுடன் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சோளிங்கா் வட்டம், போளிப்பாக்கம் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பெய்த மழையின் போது தாளிக்கல் கிராமத்தைச் சோ்ந்த தேவகி (58) என்பவா் தனது விவசாய நிலத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தாா்.
இவரது கணவா் நாராயணசாமி ஏற்கனவே இறந்துவிட்டாா். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

இளைஞா் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரையில் 3-ஆவது நாளாக மறியல் போராட்டம்
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

