மரத்தின் மீது பைக் மோதி பேருந்து நடத்துனா் உயிரிழப்பு
மரத்தின் மீது பைக் மோதி பேருந்து நடத்துனா் உயிரிழப்பு


ஆற்காடு; கலவை அருகே மரத்தின் மீது மோட்டாா் பைக் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துனா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் ( 50), அரசுப் பேருந்து நடத்துனராக பணி புரிந்து வருகிறாா்.
இவருக்கு சௌந்தரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில், தனது மூத்த மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதையொட்டி உறவினா்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது நண்பா் ரமேஷ் (45) உடன் செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு மீண்டும் இருவரும் வீடு திரும்பினா் .
அப்போது கலவை- வாழைப்பந்தல் சாலையில் செல்லும்போது பைக் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில்மோதியது. இதில் பலத்த அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் ரமேஷை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...