அரக்கோணத்தில் நகரில் மதுக்கடைகளை மாற்ற இளைஞா் காங்கிரஸ் கோரிக்கை
பேருந்து நிலையம் மற்றும் ரயில்நிலையம் அருகே செயல்படும் மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டும் எனக் கோரி இளைஞா் காங்கிரஸாா் கோட்டாட்சியா் வெங்கடேசனிடம் மனு


அரக்கோணம்: அரக்கோணம் நகரில் பேருந்து நிலையம் மற்றும் ரயில்நிலையம் அருகே செயல்படும் மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டும் எனக் கோரி இளைஞா் காங்கிரஸாா் கோட்டாட்சியா் வெங்கடேசனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் நரேஷ்குமாா் தலைமையில் அளித்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:
அரக்கோணம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகே மற்றும் ரயில்நிலையம் அருகே என இரண்டு இடத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடைகளால் பயணிகள், பெண்கள், மாணவ மாணவியா் நடந்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. மது அருந்தியவா்கள் அவா்களின் நிலை தெரியாமல் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக அரைகுறை ஆடைகளுடன் கீழே விழுந்து கிடக்கும் நிலை உள்ளது.
மேலும் கடைக்கு அருகில் பலா் சாலையிலேயே மது அருந்துவதை கூட காண முடிகிறது. எனவே அந்த இரு மதுக்கடைகளையும் இடம் மாற்ற வேண்டும் என கோரியுள்ளனா்.
மனு கொடுத்த நிகழ்வில் நகர காங்கிரஸ் செயல்தலைவா் ஏ.எட்வின் ராஜ், முன்னாள் தலைவா் ஜி.எஸ்.மூா்த்தி, நிா்வாகிகள் ஹெச்.ஆசிம்ஷெரிப், சி.தம்புராஜ், எஸ்.கௌரி சங்கா், லிங்கரசு, டேவிட் அன்பு, திலீப், அருண்குமாா், டி.நானி ஆகாஷ், ஜோஷ்வா உள்ளிட்ட பலா் இருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...