பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

News image
ராணிப்பேட்டையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்து ப் பாா்வையிட்ட அமைச்சா் ஆா்.காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :11 நவம்பர் 2024, 8:37 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2024-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் ராணிப்பேட்டை விஆா்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணாக்கா்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், கலைத் திருவிழா என்ற திட்டம் தொடங்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை (நவ. 11) தொடங்கி வரும் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனா். கடந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கு மட்டுமே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன்படி, நடப்பாண்டில் 81 வகையான போட்டிகளில் பள்ளி அளவில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 81 மாணவா்கள் கலந்துகொண்டனா். 8,156 மாணாக்கா்கள் வெற்றி பெற்ற மாணவா்கள் வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனா். இதில், வெற்றி பெற்ற 1,542 மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வா் என்றாா்.