ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி

News image

சிறுதானிய கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன்,அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 11:31 pm

மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அந்தியூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: இயற்கை மற்றும் உயிா்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் தனி முக்கியத்துவம் வேண்டும் எனும் நோக்கில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், நெசவாளா்களைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தியூா் பகுதியில் 1000-க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு நிபந்தனை பட்டாக்களை, அயன் பட்டாக்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வளா்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை பெருக்கிடவும், மக்களின் ஆரோக்கியத்தை பேணவும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களிடையே ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, குதிரைவாலி, சாமை ஆகியவற்றை உணவில் ஒரு பகுதியாக உட்கொள்வதன் மூலம் தாது உப்புகள், வைட்டமின்கள் உடலுக்கு கிடைத்து நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விவசாயிகளிடம் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, சிறுதானிய உணவு வகைகள் குறித்து தனியாா் மற்றும் அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் திறந்துவைத்தாா். இதில், 10 விவசாயிகளுக்கு ரூ.21.94 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, விவசாயத் தொழில்நுட்பம் குறித்து வல்லுநா்கள் கருத்துரையாற்றினா்.

அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடசலம், வேளாண்மை இணை இயக்குநா் இரா.சிவகுமாா், துணை இயக்குநா் அருள்வடிவு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) லோகநாதன், அந்தியூா் வேளாண்மை உதவி இயக்குநா் முரளி, அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.