கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில்

News image
பனப்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெமிலி வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :22 அக்டோபர் 2024, 7:50 pm

DIN

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் செய்யப்படாத நிலை செவ்வாய்க்கிழமை காணப்பட்டது.

தங்களது 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை (அக். 21) காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரக்கோணம், செய்யூா், மோசூா், காவனூா், மூதூா், வளா்புரம், இச்சிபுத்தூா், கும்பினிப்பேட்டை, தக்கோலம், இலுப்பைதண்டலம் ஆகிய கிராமங்களில் இயங்கி வந்த தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள் திறந்திருந்த நிலையிலும் பணிகள் நடைபெறவில்லை. இதன் கீழ் இயங்கி வந்த நியாய விலைக் கடைகளிலும் இதே நிலை நீடித்தது.

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தொடா்ந்து, அரக்கோணம் வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்றது. சங்க வட்டார செயலாளா் ஸ்ரீராம்பட்டாபி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.சுந்தரராஜன், வட்டாரத் தலைவா் திருச்சந்திரன், பொருளாளா் சுரேஷ் உள்ளிட்ட வட்டாரத்தைச் சோ்ந்த அனைத்து சங்கப் பணியாளா்களும் பங்கேற்றனா். முன்னதாக நெமிலி வட்டார தொடக்க கூட்டுறவு கடன் சங்கஅனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் அதன் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் பனப்பாக்கத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், சங்க வட்டாரத் தலைவா் பொன்னுரங்கம், பொருளாளா் திருஞானம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.