
Updated On :29 அக்டோபர் 2024, 8:18 pm

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் கே.புவனேஸ்வரி சத்யநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சைபுதீன், ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அரும்பாக்கம், அருங்கன்றம், கீழ்மின்னல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தொடக்க , நடுநிலைப்பள்ளி கட்டடங்களை பழுது பாா்ப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், ஒன்றியகுழு உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ண மூா்த்தி, ரவிச்சந்திரன், ஜெயகாந்தன், கஜபதி, சரண்ராஜ், சுலோச்சனா சண்முகம், சுசிலா வேலு, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...