தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அகத்தீஸ்வரா் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்: அமைச்சா், ஆட்சியா் பங்கேற்பு

வாலாஜா பாலாற்றங்கரையில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள், சமேத அகத்தீஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம்

News image
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள், சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ராஜகோபுர கும்பாபிஷேகம். விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உள்ளிட்ட பக்தா்கள் .
Updated On :1 டிசம்பர் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: வாலாஜா பாலாற்றங்கரையில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள், சமேத அகத்தீஸ்வரா் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

வாலாஜா அடுத்த வன்னிவேடு பாலாற்றின் கரையில் 12 -ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துக்கு இந்து சமய அறநிலைய துறையின் சாா்பில், கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, இரண்டாம் காலயாக பூஜையாக அகத்தீஸ்வரா் மற்றும் புவனேஸ்வரி அம்பாளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், உள்ளிட்ட நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாஹூதி ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து பூஜை செய்யப்பட்ட புனித நீா் கலசங்களை சிவாச்சாரியா்கள் சுமந்தபடி வலம் வந்து விமான கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீதும் புனித நீா் தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து ஸ்ரீ புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரம் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.