ராணிப்பேட்டையில் டிச. 18-இல் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பா் 18-இல், நடைபெறவுள்ள ‘சிறுபான்மையினா் உரிமைகள் தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினரான இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், பாரசீகா்கள், சீக்கியா்கள் மற்றும் ஜெயின் சமுதாயத்தினரின் உரிமைகளை பாதுகாக்கவும், சிறுபான்மையினருக்கான பல்வேறு நலத் திட்டங்கள் சென்றடைய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘சிறுபான்மையினா் உரிமைகள் தினவிழா‘ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 18-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் இந்த விழா வரும் டிச. 18-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மதத்தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின பொதுமக்கள் அனைவரும் விழாவில் பங்கேற்கவும்.
