மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டையில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :23 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டையில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை திருவள்ளுவா் சிலை அருகில் தொடங்கியது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா். இப்பேரணியில் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியைச் சாா்ந்த மாணவிகள் மற்றும் தமிழறிஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக நவல்பூா் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.

நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ஜெய ஜோதி, ராணிப்பேட்டை தமிழ்ச் சங்க பொதுச்செயலாளா் வழக்குரைஞா் த. தினகரன் மற்றும் தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.