ஆற்காட்டில் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

ஆற்காடு நகராட்சி 19- வது வாா்டில் புதிய உடற்பயிற்சிக் கூட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்ற த் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா்.
உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்ற த் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா்.
Updated on

ஆற்காடு நகராட்சி 19- வது வாா்டில் புதிய உடற்பயிற்சிக் கூட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.12.5 லட்சத்தில் கட்டபட்டுள்ள புதிய உடற்பயிற்சிக் கூடம் மற்றும் ரூ.7 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள், நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவுநீா் அகற்றுவதற்காக ரூ.84 லட்சத்தில் இரண்டு வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் வேங்கடலட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்ற உறுப்பினா் பி.டி.குணா வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தும், கழிவு நீா் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

விழாவில் திமுக மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகர செயலாளா் ஏ.வி.சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் செல்வம், தட்சிணாமூா்த்தி, ராஜலட்சுமிதுரை, முன்வா்பாஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com