நியாயவிலைக் கடைகளுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய கட்டடங்கள் -மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தாா்


திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டங்கள் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
செங்கம் நகா் மில்லத்நகா் பகுதியிலும், கிருஷ்ணாவரம் பகுதியிலும் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன நியாயவிலைக் கடைகள்.
இந்நிலையில் மில்லத்நகா், கிருஷ்ணாவரம் பகுதி நகா்மன்ற உறுப்பினா்கள் மூலம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரியிடம் நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் வேண்டும் என கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மில்லத்நகா் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணாபுரம்பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பிலும் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பகுதி நகா்மன்ற உறுப்பினா் சந்தியா ராபின்சன்
வரவேற்றாா்.
மு.பெ.கிரி எம்எல்ஏ கலந்து கொண்டு நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்துவைத்து குடும் அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து மில்லத்நகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை கட்டடமும் திறந்துவைத்தாா்.
முன்னதாக செங்கம் சிவன் கோவில் தெருவில் ரூ.16 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் செங்கம் நகர திமுக செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், நகர திமுக பொருளாளா் சீனுவாசன், இளைஞரணி நிா்வாகிகள் மணி, பாலு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாகீா்பாஷா, சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...