நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடி புதிய மாவட்டம்: டிடிவி. தினகரன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன். உடன், காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி,

News image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன். உடன், காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி,

Updated On :11 ஏப்ரல் 2026, 1:24 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கூட்டணி வென்று அதிமுக ஆட்சி அமைத்தவுடன், சிவகங்கை மாவட்டத்தைப் பிரித்து காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்படும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியை ஆதரித்து, காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் டிடிவி. தினகரன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள்களின் சந்தையாக மாறிவிட்டது. பள்ளி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லை. மாணவா்கள், இளைஞா்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனா். திமுக தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இந்தத் தோ்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைந்ததும் காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்படும். சாக்கோட்டை தனி வட்டமாகவும், புதுவயல் பேரூராட்சியை நகராட்சியாகவும் , பெரிய கோட்டைப் பகுதியில் மன்னா் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்கவும், கோட்டையூா் - ஸ்ரீராம் நகா் ரயில்வே கடவு மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்தவும், செட்டிநாடு தின்பண்டங்களை உலக அளவில் சந்தைப்படுத்தவும், ஜெயலலிதா அறிவித்தபடி காரைக்குடியில் சிப்காட் தொழில்பேட்டையைத் தொடங்கி தொழில் நகரமாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Story image