மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 333 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட் ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 333 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட் ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 333 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 333 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,250/- வீதம் ரூ.25,000/- தையல் இயந்திரங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், உதவி ஆணையா் கலால் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com