தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 614 மனுக்கள் பெறப்பட்டன.

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா.

Updated On :9 மார்ச் 2026, 9:07 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 614 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 614 மனுக்களைப் பெற்று மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு முழங்கை தாங்கி, மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.17 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதில் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, உதவி இயக்குநா் (ஊராட்சி) சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.