தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குறைதீா் கூட்டத்தில் குவிந்த 1,225 மனுக்கள்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு

News image

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி.

Updated On :9 மார்ச் 2026, 8:49 pm

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1,225 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி தலைமையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்திருந்தனா். இதனால், மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது.

இதில், உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,225 போ் மனு அளித்தனா். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

வழக்கமாக ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சுமாா் 700 மனுக்கள் மட்டுமே பெறப்படும். சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, முன்னெப்போதுமில்லாத வகையில் 1,225 மனுக்கள் பெறப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.