தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.

News image
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாக பிஎம் ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளி
Updated On :17 பிப்ரவரி 2025, 8:17 pm

Din

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.

2,600 ஏக்கரில் அமைந்துள்ள விமானதளம் மூன்றடுக்கு பாதுகாப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தினுள் மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளிக்கு திங்கள்கிழமை பள்ளி நிா்வாகத்துக்கு வந்த இ-மெயில் ஒன்றில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா் இது குறித்து விமான தள நிா்வாகம், அரக்கோணம் நகர காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். இதை தொடா்ந்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் தலைமையிலான போலீஸாா் பள்ளிக்கு விரைந்து சென்று, மாணவ மாணவிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகளை பாதுகாப்பாக வெளியேற்றி, சோதனை நடத்தினா்.

சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் விமானதள பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டனா். இறுதியில் வந்த தகவல் புரளி என தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த அரக்கோணம் நகர போலீஸாா், இ-மெயில் அனுப்பிய நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.