ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

ராணிப்பேட்டையில் விபத்தை பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிய காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்..
காய்கறிகளை அள்ளிச் செல்லும் மக்கள்
காய்கறிகளை அள்ளிச் செல்லும் மக்கள்
Updated on
1 min read

ராணிப்பேட்டை அருகே பேருந்து, காய்கறி லாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளான இடத்தில், சாலையில் கொட்டிக் கிடந்த காய்கறிகளை மூட்டைமூட்டையாக மக்கள் அள்ளிச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து, 4 பேருந்துகளில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு புதன்கிழமை இரவு ஊர் திரும்பி உள்ளனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செல்லும்போது பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும், ஆந்திரத்தில் இருந்து காய்கறி ஏற்றிவந்த ஈச்சர் வேனும் நேருக்குநேர் மோதியது.

மேலும், பக்தர்கள் பேருந்தின் பின்புறம் மணல் லாரி பலமாக மோதியதில், பேருந்தும் காய்கறி வேனும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காய்கறி வேனில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பேருந்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிக் கிடந்த 16 டன் காய்கறிகளை மூட்டைமூட்டையாக அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com