ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் பலி!

மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய கர்நாடக பக்தர்கள் பேருந்து விபத்துக்குள்ளானது பற்றி...

Updated On :

வேலூர்: ராணிப்பேட்டை அருகே மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய கர்நாடக பக்தர்கள் சென்ற பேருந்து, லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

மேலும், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து, 4 பேருந்துகளில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு புதன்கிழமை இரவு ஊர் திரும்பி உள்ளனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செல்லும்போது பக்தர்கள் சென்ற ஒரு பேருந்து, மண் ஏற்றிவந்த லாரியை முந்திச் செல்ல முயற்சித்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக ஆந்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த ஈச்சர் வேன் மீது பக்தர்கள் பேருந்து நேருக்குநேர் மோதியுள்ளது.

மண் லாரியும் பேருந்தின் பின்பக்கம் மோதியதால், சாலையோர பள்ளத்தில் 3 வாகனங்களும் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேனில் வந்த ஓட்டுநர் மஞ்சுநாதன் (30), கிலினர் சங்கரா(32), கிருஷ்ணப்பா (65), சோம சேகர் (30) ஆகிய 4 சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தனர்

மேலும் பேருந்தில் பயணித்த பெண்கள் உள்பட 35-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த கோர விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.