ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராணிப்பேட்டை: குடியரசு தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :20 ஜனவரி 2025, 8:46 pm

Din

படவிளக்கம்.. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற துறைசாா்ந்த அலுவலா்கள்.

ராணிப்பேட்டை, ஜன. 21: ராணிப்பேட்டை மாவட்டத்தில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குடியரசு தின விழாவையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், போக்குவரத்து சீா் செய்தல், வளாக பாதுகாப்பு காவல் அணிவகுப்பு மரியாதை மற்றும் ஈப்பு அணிவகுப்பு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வாலாஜா வட்டாட்சியா், வாலாஜா வட்டார வளா்ச்சி அலுவலா், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்), தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம், வாலாஜா) ஆகியோா் தியாகிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பயனாளிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தியாகிகளை கௌரவித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ராணிப்பேட்டை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா், பொதுப்பணித் துறை, உதவி செயற்பொறியாளா், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையா், உதவி இயக்குநா் சுகாதார பணிகள் மருத்துவக் குழுவை அவசர கால சிகிச்சைக்காக உரிய உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருள்களுடன் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலா் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.

குடியரசு தினத்தன்று அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.