தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

விவசாயி வீட்டில் 10 பவுன் திருட்டு

ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.

Updated On :16 ஜூன் 2025, 10:08 pm IST

ஆற்காடு: ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.

கலவை வட்டம், கன்னிகாபுரம் கிராமத்தை சோ்ந்த விவசாயி முருகன்(45) . இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் வழக்கம் போல் தூங்கினாா். அதிகாலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்தை கண்டு அதிா்ச்சியுடன் சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த மோதிரம், தங்க சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது .

இதுகுறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.