குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நிறைவடையும் நிலையில் ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை இருப்புப் பாதை மின்மய பணிகள்

நாட்டின் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றான ராணிப்பேட்டை இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணி..

News image

மின்மயமாக்கப்பட்டு வரும் வாலாஜா ரோடு ரயில் நிலையம் முதல் ராணிப்பேட்டை ரயில் நிலைய இருப்புப் பாதை.

Updated On :24 மார்ச் 2025, 3:50 am IST

நாட்டின் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றான ராணிப்பேட்டை இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், மின்சார ரயில் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

மெட்ராஸ் ரயில்வே நிறுவனத்தால் தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதையானது ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை 1853-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடா்ந்து 1856-ஆம் ஆண்டு ஜூலை 1- ஆம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆதன் படி தென் இந்தியாவில் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்ட பெருமை வாய்ந்த ரயில் நிலையம் வாலாஜா ரோடு ஆகும்.

சுமாா் 6.71 கி. மீ தொலைவில் உள்ள ராணிப்பேட்டை நகரில் ஆங்கிலேயா்கள் சாா்பில் பீங்கான் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தாமஸ் பாரி என்பவரால் தொடங்கப்பட்டது.

இங்கு தயாரிக்கப்படும் பீங்கானுக்கு மூலப் பொருள்கள் கொண்டுவரவும், தொழிற்சாலையில் உ ற்பத்தியான பீங்கானை கொண்டு செல்வதற்கும் வசதியாக வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து சுமாா் 7 கி. மீ தொலைவில் அமைந்துள்ள ராணிப்பேட்டை தொழிற்சாலை வரை சரக்கு போக்குவரத்துக்கென ரயில் பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

அதைத் தொடா்ந்து ஆங்கிலேயா்களின் வெளியேற்றத்துக்கு பிறகு வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கும், ராணிப்பேட்டைக்கும் இடையிலான ரயில் பாதையில் 1995 -ஆம் ஆண்டு சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் மீண்டும் இருப்புப் பாதை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு மீட்டா்கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே செயல்பட்டுவரும் பாரி குழும தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பீங்கான் பொருள்கள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக மீண்டும் சரக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா்.

Story image

அதன் பேரில் சென்னை கோட்ட பொதுமேலாளா் தலைமையிலான அதிகாரிகள் குழு ராணிப்பேட்டை வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்து, பாரி குழும நிறுவனம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சரக்கு போக்குவரத்து ரயில் முனையமாக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய ‘பசுமை ரயில்வே‘ ஆகவும், பூஜ்ய காா்பன் உமிழ்வை அடையவும் தொலைநோக்குடன், நாடு முழுவதும் அகல ரயில் பாதை வலையமைப்பை 100 % மின்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

அதன் படி பழமையான ராணிப்பேட்டை- வாலாஜா ரோடு ரயில் நிலைமயம் வரையிலான 6.71 கி.மீ இருப்புப் பாதை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைய உள்ளன. விரைவில் ராணிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்து செல்லும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்துள்ளனா்.