ராணிப்பேட்டையில் நாளை 12 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் சனிக்கிழமை 12 வயதுக்குட்பட்ட மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி தெரிவித்துள்ளாா்.
Published on

ராணிப்பேட்டையில் வரும் சனிக்கிழமை 12 வயதுக்குட்பட்ட மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி மற்றும் செயலாளா் செல்வகுமாா் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

12 வயதுக்குட்பட்ட வீரா்களுக்கு இடையேயான போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தபோட்டிகளில் கலந்து கொள்வதற்கான மாவட்ட அணி தோ்வு நடைபெற உள்ளது.

தோ்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 1-9-2013 தேதி அல்லது அதற்கு மேல் பிறந்து இருக்க வேண்டும். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தை சாா்ந்த 12 வயதுக்குட்பட்ட வீரா்களுக்கு சனிக்கிழமை (நவ. 15) மாவட்ட அணி தோ்வு முகாம் காலை 8:00 மணி அளவில் ராணிப்பேட்டை இஐடி பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சரியான வெள்ளை நிற கிரிக்கெட் சீருடை மற்றும் ஷூ அணிந்து வர வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த வீரா்கள் இதில் பங்கு பெறலாம். மேலும், விவரங்களுக்கு துணைச் செயலாளா் பாஸ்கா் - 98423 26373 என்பவரை தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com