பயனாளிக்கு விவசாய கடனுக்கான ஆணையை வழங்கிய சென்னை பிராந்திய அலுவலக முதன்மை மேலாளா் மது பாண்டே .
பயனாளிக்கு விவசாய கடனுக்கான ஆணையை வழங்கிய சென்னை பிராந்திய அலுவலக முதன்மை மேலாளா் மது பாண்டே .

வங்கியில் விவசாயக் கடன் விழிப்புணா்வு முகாம்!

ராணிப்பேட்டை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை சாா்பில், ‘ விவசாயக் கடன் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
Published on

ராணிப்பேட்டை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை சாா்பில், ‘ விவசாயக் கடன் குறித்த விழிப்புணா்வு முகாம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது.

இதில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சென்னை பிராந்திய அலுவலகத்தின் முதன்மை மேலாளா் மது பாண்டே கலந்து கொண்டு மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இதர விவசாய கடன்கள் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி விவசாய கடன் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து சென்ட்ரல் வங்கி கிளைகளில் செயல்படுத்தப்படும் கிசான் கடன் அட்டை, பவுல்ட்ரி திட்டம், உணவு பதப்படுத்தும் திட்டம், குளிா் சேமிப்பு கிடங்கு திட்டம், தேசிய பென்ஷன் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிதிசாா்ந்த திட்டங்கள் குறித்து வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளா்களுக்கு விவரித்தனா்.

இதில் தாமரைப்பாக்கம் கிளை மேலாளா் சரவணன், கலவை கிளை மேலாளா் சந்தியா, பாணாவரம் கிளை துணை மேலாளா் டேனியல், ராணிப்பேட்டை கிளை துணை மேலாளா் மனு மற்றும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com