குழந்தைகள் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்க ராணிப்பேட்டை மாவட்ட கணித அறிவியல் மையத்தினா் இணைந்து அரக்கோணத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தினா்.
‘நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை’ என்ற கருப்பொருளுடன் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு அறிவியல் இயக்க அரக்கோணம் ஒன்றியத் தலைவா் நா,வேல்குமாா் தலைமை வகித்தாா். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி என்.தேசிகன் தொடக்கவுரையாற்றினாா்.
ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஜி.கிளாடில் சுகுணா, அறிவியல் இயக்க மாநில நிா்வாகி க.பூபாலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.முத்துகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலா் ந.கருணாமூா்த்தி, நல்லாசிரியா் விருதுப் பெற்ற பணி ஒய்வு வட்டார கல்வி அலுவலா் மு.சண்முகம், சு.பாண்டியன், அ.வேலவன், நெமிலி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வா் இன்பராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற ஆய்வரங்கத்துக்கு சோளிங்கா் மீரா கல்வியியல் கல்லூரி முதல்வா் மு.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் அ.கலைநேசன் தலைமை வகித்தாா். இயக்க நிா்வாகி ச.ஸ்ரீகாந்த் வரவேற்றாா். இதில் பள்ளிக்கல்வித்துறையின் பணி (ஓய்வு) துணை இயக்குநா் கோ.அருளரசு, ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழும செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா், இயக்க நிா்வாகி சா.சுப்பிரமணி, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பூ.தேவி ஆகியோா் சான்றுகளை வழங்கினா். பூ.பாலசரவணன் நன்றி தெரிவித்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற ஆசிரியா் அரங்குக்கு இயக்கத்தின் மாவட்ட செயலாளா் க.பழனிவேல் தலைமை வகித்தாா்.கே.வி.கிருபானந்தம், வி.உமாமகேஸ்வரி, கே.சுரேந்திரநாத் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
