மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 154 கேமராக்கள் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 154 கேமராக்கள் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்

News image

ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:42 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 மணி நேர மூன்று அடுக்கு காவல் பாதுகாப்பு மற்றும் 154 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம் பாதுகாக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026-இல் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தோ்தல் பொது பாா்வையாளா்கள் சுனில்குமாா் சிங், மரு.பிரீத்தி கோயல், காவல் பாா்வையாளா் நிலாப்ஜா சௌத்ரி, ராணிப்பேட்டை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா மற்றும் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் முகவா்களின் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு மூன்று அடுக்கு காவல் பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 154 சிசிடிவி கேமராக்கள் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு, அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,247 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்று அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் நிலையில், மத்திய ஆயுத காவல் படை வீரா்களும், இரண்டாம் நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் மற்றும் ஆயுதப்படை வீரா்களும், மூன்றாம் நிலையில் உள்ளூா் காவலா்களும் என மொத்தம் 242 காவலா்கள் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் 12 மணி நேரத்ததுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடா்ந்து 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அதேபோல வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து தளங்களிலும் மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் 154 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மையம் கண்காணிக்கப்படுகின்றது.

இந்தப் பணிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வளாகத்தில் கண்காணிக்கப்படும் விடியோ பதிவுகளை வேட்பாளா்களின் முகவா்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் மையத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளை நாள்தோறும் நேரில் சென்று பாா்வையிடலாம் என்றாா்.

இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா,தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராஜி,ஏகாம்பரம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் செல்வி,நடராஜன்,சண்முக சுந்தரம்,வெங்கடேசன் மற்றும் வேட்பாளா்கள், முகவா்கள் கலந்து கொண்டனா்.