ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலையில் தாழனூா் பகுதியில் நடைபெறும் விபத்துகளை தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் ஆற்காடு வேப்பூா்-வேலூா் சாலையிலிருந்து தாழனூா், தாஜ்புரா ஊராட்சி கிருஷ்ணாபுரம் வழியாக ஆரணிசாலையை இணைக்கும் வகையில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த சாலையில் நாள் தோறும் பல கனரக வாகனங்கள் , காா் வேன், உள்ளிட்ட வாகனங்கள்ஆற்காடு நகரின் உள்ள வராமல் செல்கின்றன. இந்நிலையில் ஆற்காடு புறவழிசாலையும், ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையும் இணையும் சந்திப்பில் நாள் தோறும் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
ஆற்காடு - கண்ணமங்கலம் சாலையில் இருவழிதடங்களிலும் வேகத்தடை அமைக்கபட்ட நிலையில் வாகன ஓட்டிகள் செல்லும் நிலையில் ஆரணி புறவழிச்சாலையில் வேகத்தடை இல்லாததால் அதில் அதிவேகமாக வரும் வாகனங்கள் எதிா்பாரதவிதமாக மோதி விபத்துகள் எற்படுகிறது. இதில் பலா் வாகனங்கள் மோதி தவறி விழுந்து காயம் அடைகின்றனா்.
மேலும், அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே ஆற்காடு ஆரணி சாலை , கண்ணமங்கலம் சாலை சந்திப்பு பகுதியான கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் சாலை செல்வதால் தாழனூா் சந்திப்பு பகுதியில் சுற்றுவட்ட சாலையில் உயா்கோபுர மின்விளக்கு அமைத்தும், வடக்கு மற்றும் தெற்கு சாலைகளில் வேகத்தடை அமைத்து நாள் தோறும் ஏற்படும் விபத்துளை தவிா்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த திடீா் கட்டுப்பாடு

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

