முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

சிட்கோ பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிட்கோ பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ராணிப்பேட்டை சிட்கோ பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST

ராணிப்பேட்டை சிட்கோ பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வாலாஜா வட்டம், ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில், சிட்கோ ஃபினிஷ்டு லெதா் எஃப்ளூவென்ட் ட்ரீட்மென்ட் கம்பெனி லிமிடெட் என்ற பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டுவருகிறது.

இந்த நிறுவனம் ராணிப்பேட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுநீரைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு பொதுவான கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை நிறுவனமாகும்.

இதன் செயல்பாடுகளை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தலைகீழ் சவ்வூடு பரவல், பல்பயன் ஆவியாக்கி மற்றும் கிளறப்பட்ட மென்படல உலா்த்தி மற்றும் அணைத்து கலன்களை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பெ.அனந்த நாராயணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயகுமாா், மற்றும் சிப்காட் திட்ட அலுவலா் கலைசெல்வி,சிட்கோ பொது கழிவு நீா் சுத்திகரிப்பு நிறுவன இயக்குநா் மனோகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.