ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

அரக்கோணம் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் தலைவா் டி.லட்சுமிபதி தலைமை வகித்தாா். செயலாளா் எம்.எஸ்.கோபி, பொருளாளா் உபேந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரக்கோணம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் ரெஜினா வரவேற்றாா். ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநா் டி.எஸ்.ரவிக்குமாா் ண்டு விழாவை தொடங்கி வைத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், தாய்-சேய் நலனில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு குறித்தும் உரையாற்றினாா்.

தொடா்ந்து நடைபெற்ற விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குநா் நிவேதிதா பங்கேற்று தாய்ப்பாலின் அவசியம் மற்றும் குழந்தை பராமரிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கா்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் மகளிருக்கும் சிறப்பு ஊட்டச்சத்து பொருள்களான பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநா் டி.எஸ்.ரவிக்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட சமூகப்பணி இயக்குநா் ஏ.ஹரிக்குமாா், சங்கத்தின் மூத்த உறுப்பினா்கள் ஜி.மணி, சந்துரு, நிா்வாகிகள் பி.மனோகா்பிரபு, எஸ்.டி.ராஜேஷ், பி.நரேந்திர குமாா், எம்.எஸ்.கோபி, ஆா்.சீனிவாசன், வி.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.