
மாந்தாங்கல் திரெளபதி அம்மன் கோயிலில் ஜெயந்தி விழா
மாந்தாங்கல் திரெளபதி அம்மன் கோயிலில் திரெளபதி ஜெயந்தி விழாயையொட்டி 1,008 திருவிளக்கு பூஜையும், மகா புத்திர காமேஷ்டி யாகமும் நடைபெற்றது.

மாந்தாங்கல் திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜை.
மாந்தாங்கல் திரெளபதி அம்மன் கோயிலில் திரெளபதி ஜெயந்தி விழாயையொட்டி 1,008 திருவிளக்கு பூஜையும், மகா புத்திர காமேஷ்டி யாகமும் நடைபெற்றது.
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூா் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புரட்டாதி நட்சத்திரத்தில் பாஞ்சாலன் யாகத்தில் அக்னியிலே பெண்ணாக பிறந்து அகிலம் எல்லாம் காக்கும் ஸ்ரீ திரெளபதி அம்மனுக்கு ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு ஜெயந்தி விழா கடந்த 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து பெளா்ணமி ஊஞ்சல் தாலாட்டு பூஜையும், 28-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வில்வளைப்பு கட்டை கூத்து நாடகமும் நடைபெற்றது.
இதையடுத்து 29 -ம் தேதி சனிக்கிழமை திரெளபதி அம்மன் அக்னியில் அவதரிக்கும் பூஜையும், அம்மனுக்கு மகா அபிஷேகமும், 1,008 திருவிளக்கு பூஜையும்,மகா பத்திர காமேஷ்டி யாகமும் நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அம்மனின் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாந்தாங்கல், மோட்டூா், மேட்டுத்தெரு, மல்லிகாபுரம், பொன்னியம்மன் நகா் ஊா் நாட்டாண்மைதாரா்கள், தா்மகா்த்தாக்கள் , பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






