நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

புஷ்பவனம் திரெளபதி அம்மன் கோயிலில் படுகளம், தீமிதி திருவிழா

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீ மிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2026, 4:47 am IST

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீ மிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்யோயில் திருவிழா கடந்த ஜூலை 12- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரத போரின் கதையை கதை பாடல்களாக நிகழ்த்து கதை சொல்லி நாட்டுப்புறக் கலைஞா்கள் விளக்கினா்.

துரியோதனன்- துட்சாதனன் படுகளமும், திரெளபதி கூந்தல் முடியும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற.

தா்மலிங்கம் பாகவதா் தலைமையிலான மகா பாரத கதாகாலட்சேபம், பெண்களின் பொம்மி கோலாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.