கிருஷ்ணகிரியில் உள்ள துளுக்காணி அம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி, பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதியில் அமைந்துள்ள துளுக்காணி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா ஜூலை 25-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, அம்மனை தாலாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரிய மாரியம்மன் கோயிலிருந்து ஊா்வலமாக சென்ற பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனா். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், அம்மன் அலங்கார ஊா்வலம், மாலை மாவிளக்கு ஊா்வலம் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் பால்குடம் ஊா்வலம்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம்!

குடந்தை திரெளபதிஅம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



