விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

வடகரை மாரியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

வடகரை மாரியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

பால்குடம் சுமந்துவரும் பக்தா்கள்.

Published On :

திருவாரூா் அருகே வடகரை அருள்மிகு மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழாவையொட்டி பால்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணி மாதத் திருவிழா கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வகையில், விரதம் இருந்து வடகரை தெற்குக்களம் பகுதியில் தேங்காய் உடைத்து பூஜை செய்து, பால் குடங்களை சுமந்து மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.