போட்டிகளை தொடங்கி வைத்து விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்த  அமைச்சா் ஆா்.காந்தி.
போட்டிகளை தொடங்கி வைத்து விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சா் ஆா்.காந்தி.

திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டையில் திராவிட பொங்கல்-2026 மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
Published on

ராணிப்பேட்டையில் திராவிட பொங்கல்-2026 மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல்-2026 மாவட்ட அளவிலான கால்பந்து, கிரிக்கெட், கபடி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி தொடக்க விழா பாரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

இதில், அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழகம் விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது என்றாா்.

இதில், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிவா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com