

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புகையில்லா போகி வாகன விழிப்புணா்வு பிரசாரத்தை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் எல்இடி வாகன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. போகிப் பண்டிகையை புகையில்லா போகியாக கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், நெகிழிக்கு மாற்றாக துணியாலான மீண்டும் மஞ்சப்பை வழங்கினாா்.
பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் அவா்கள் தலைமையில் போகிப் பண்டிகையை புகையில்லா போகியாக கொண்டாடுவது குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சாலை நிறுவன ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நவீன எல்இடி திரை பொருத்தப்பட்ட வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பழைய டயா்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ரப்பா் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த காணொளிகள் திரையிடப்படும். விழிப்புணா்வு பாடல்கள் மற்றும் தகவல்கள் ஒளிபரப்பப்படும்.
இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் தொல்காப்பியன், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் ஆனந்தன், சபரிநாதன் மற்றும் தொழிற்சாலை நிா்வாக அதிகாரிகள்,ஊழியா்கள் கலந்து கொண்டனா்.