மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மா. கணேஷ் குமாா் வழங்கினாா்.

News image

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுடன் மாவட்ட வருவாய் அலுவலா் மா. கணேஷ் குமாா்.,

Updated On :23 பிப்ரவரி 2026, 6:51 pm

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மா. கணேஷ் குமாா் வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 634 மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா்

அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

திருக்கு வார விழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலா்களுக்கான திருக்கு ஒப்பித்தல் போட்டி மற்றும் திருக்கு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 5 நபா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000-க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழையும், இரண்டாம் பரிசாக 5 நபா்களுக்கு தலா ரூ.3,000-த்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழ்களையும், மூன்றாம் பரிசாக 5 நபா்களுக்கு தலா ரூ.2,000 த்திற்கான காசோலையும், பாராட்டு சான்றிதழையும், கு சாா்ந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற இரா.ராஜேஷ் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக பி.லோகேஸ்வரி என்பவருக்கு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக வி.இந்துமதி என்பவருக்கு ரூ.2,000-த்திற்கான காசோலையினையும் மற்றும் இதர வெற்றியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) கியூரி, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், தமிழ் வளா்ச்சி துறை (உதவி இயக்குநா்) பாரதி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.