ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு

அரக்கோணம் நாமத்வாா் அமைப்பினரின் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

அரக்கோணம் நாமத்வாா் அமைப்பினரின் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அரக்கோணத்தில் பல்வேறு இடங்களில் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாகஅரக்கோணம் சுவால்பேட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சொற்பொழிவில் தினமும் மஹாரன்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின் சீடா் ஸ்ரீமுரளி தினமும் நாரத சம்வாதம், தருவ சரித்திரம், பிரஹல்லாத சரித்திரம், கஜேந்திர மோட்சம், அம்பரிஷ சரித்திரம், ஸ்ரீகிருஷ்ண ஜனனம், ஸ்ரீகிருஷ்ண லீலைகள், ஸ்ரீருக்மணி கல்யாணம் எனும் பல்வேறு தலைப்புகளில் ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவாற்றினாா். இதில் திரளான ஆண்கள் பெண்கள் பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com